சந்திரா லே – அவுட் : காதலிக்கு தொல்லை கொடுத்ததால், நண்பரை சரமாரியாக கத்தியால் குத்திய காதலன் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு சந்திரா லே – அவுட்டில் வசிப்பவர் தனுஷ், 25. இவரது நண்பர் கார்த்திக், 25. தனுஷும், இளம்பெண் ஒருவரும் காதலித்தனர். இந்நிலையில் தனுஷுன் காதலியின் மொபைல் எண் கார்த்திக்கிற்கு கிடைத்தது.
அவர் தினமும் போன் செய்து, தன்னுடன் பேச வேண்டும் என்றும், தன்னை காதலிக்கும்படி கூறியும் தொல்லை கொடுத்து உள்ளார்.
இதுபற்றி தனுஷிடம், காதலி கூறினார். நேற்று முன்தினம் இரவு நாயண்டஹள்ளிக்கு கார்த்திக்கை, தனுஷ் வரவழைத்தார். தனது இன்னொரு நண்பர் சகாபுதீனுடன், 26 சேர்ந்து, கார்த்திக்கை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பினார்.
உயிருக்கு போராடியவரை அப்பகுதி மக்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனுஷ், சகாபுதீனை சந்திரா லே – அவுட் போலீசார் கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement