2024 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் காலண்டரை வெளியிட்டார் அனுராக் சிங் தாக்கூர்

புதுடெல்லி,

மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் சிங் தாக்குர், 2024ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் காலண்டரை புதுடெல்லியில் நேற்று வெளியிட்டார். பல்வேறு துறைகளின் வாரியாக பிரதமர் நரேந்திர மோடி அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் காலண்டர் அமைந்துள்ளது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய தாக்கூர், “நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் (அமாரா சங்கல்ப் விக்சித் பாரத்)” என்ற கருப்பொருளுடன் மத்திய அரசின் 2024-ம் ஆண்டுக்கான காலண்டரை டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார். காலண்டரில் 12 மாதங்களும் ஒவ்வொரு கருப்பொருளை எடுத்துக்காட்டும் விதத்தில் அதற்கேற்ற படங்களுடன் வடிவமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார்ட்அப் துறையில் இந்தியா மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பாக மாறியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் பலவீனமான ஐந்தில் இருந்து உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக நாடு மாறியுள்ளது.

நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 இல் இருந்து 150 ஆக உயர்ந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 7ல் இருந்து 23 ஆக உயர்ந்துள்ளது. மெட்ரோ 22 நகரங்களை எட்டியுள்ளது. லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை எடுத்துக்காட்டி, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்துகிறது” என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.