வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: அயோத்தியில் பிரதமர் மோடி துவக்கி வைத்த அமிர்த பாரத் ரயிலுக்கு பீஹாரில் மக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
பீஹாரின் தர்பாங்காவில் இருந்து அயோத்தி வழியாக புதுடில்லி செல்லும் அதிவேக பயணியர் ரயிலான அமிர்த பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். இந்த ரயில் கடவுள் சீதா உடன் தொடர்புடைய இடத்தில் இருந்து கிளம்பி, ராமர் பிறந்த நகர் வழியாக டில்லியை சென்றடைகிறது. இந்த ரயில் கட்டணம், சிறப்பு ரயில் கட்டணங்களை விட குறைவாகவும், சூப்பர் பாஸ்ட் ரயில் கட்டணத்தை விட அதிகமாகவும் உள்ளது.
இந்த ரயிலானது நாளை(ஜன.,1) முதல் வழக்கமான சேவையை துவக்க உள்ளது. பயணிகள் மத்தியில் ரயிலுக்கான ஆர்வம் உள்ளதால், இருக்கைகள் நிரம்பி வருகின்றன. அயோத்தியில் இருந்து கிளம்பிய இந்த ரயில், தர்பங்கா வரும் வரை பல இடங்களில் பொது மக்கள் மற்றும் பயணிகள் ஒன்று கூடி வரவேற்றனர். அந்த ரயிலை புகைப்படம் எடுத்ததுடன், அதன் முன்னர் செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும், இந்த ரயிலின் சிறப்பு குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement