மதுரை: பொதுமக்களின் பல ஆண்டுகள் கனவான மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கான டெண்டர் ஜனவரி 2ந்தேதி இறுதி செய்யப்படும் என மத்திய இணையமைச்சர் எஸ்.பி.சிங் தெரிவித்து உள்ளார். பல ஆண்டகளாக கிடப்போடப்பட்டுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று மத்தியஅரசு தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான மாஸ்டர் பிளானுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் […]