சென்னை: தென்மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பண்டிகை வரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இயக்கப்படும் 6 பகுதி அரசு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது. இந்நிலையில், அரசு விரைவு பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரத்தில் முன்பதிவு செய்த பயணிகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரையான கட்டணம் அவரவர் வங்கிக் கணக்கில் திருப்பி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. […]