புத்தாண்டில் டாப் கியர் போடும் டாடா, ஜியோவுக்கு ஆப்பு… ரூ.266-க்கு 23 ஓடிடி சந்தா!

டாடா பிளே நிறுவனம் அதன் ஓடிடி திட்டங்களின் கீழ் மாதம் ரூ.266-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி, 23 ஓடிடி சந்தா வழங்குகிறது. இந்த திட்டம் டாட்டா பிளே பிஞ்ச் சூப்பர் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, எம்எக்ஸ்பிளேயர், பிளேஃபிளிக்ஸ், கிக்க், ஃபேன்கோட், ஸ்டேஜ், சன்நெக்ஸ்ட், ஆஹா, ஹங்கமா பிளே, ஷீமாரூமி, எபிக்ஆன், டாக்குபே, ஷார்ட்ஸ்டிவி, டிராவல்எக்ஸ்பி, பிளானட் மராத்தி, மனோரமா மேக்ஸ், ஐஸ்டீரீம், சாவ்பல், ரீல்டிராமா, நம்மஃபிளிக்ஸ் மற்றும் விஆர் ஓடிடி ஆகிய 23 ஓடிடி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், ஒரே நேரத்தில் டிவி, மொபைல், லேப்டாப் உள்ளிட்ட 4 டிவைஸ்களில் ஸ்ட்ரீம் செய்யலாம். அதேபோல தனித்தனியே ஓடிடி ஆப்களை பயன்படுத்த தேவையில்லை. கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் டாட்டா பிளே பிஞ்ச் ஆப்பை டவுன்லோட் செய்தால்போதும், அதிலேயே அனைத்து கன்டென்ட்களும் வந்துவிடும்.

டாட்டா பிளே பிஞ்ச் சூப்பர் திட்டத்தின் நன்மைகள்:

மாதம் ரூ.266-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி
23 ஓடிடி ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷன்
ஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் ஸ்ட்ரீம் செய்தல்
தனித்தனி ஓடிடி ஆப்களை பயன்படுத்த தேவையில்லை

டாட்டா பிளே பிஞ்ச் சூப்பர் திட்டத்தை எப்படி ரீசார்ஜ் செய்வது?

– கூகுள் பிளே ஸ்டோரில் டாட்டா பிளே பிஞ்ச் ஆப்பை டவுன்லோட் செய்யவும்.
– ஆப்பில் உங்கள் டாட்டா ஐடி அல்லது மொபைல் எண்ணை பயன்படுத்தி உள்நுழையவும்.
– டாட்டா பிளே பிஞ்ச் சூப்பர் திட்டத்தை தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்யவும்.
– இந்த திட்டம் ஓடிடி ஆர்வலர்களுக்கு மிகவும் சாதகமான ஒன்று. குறைந்த செலவில் அதிக ஓடிடி கன்டென்ட்களை பெற விரும்புபவர்களுக்கு இந்த திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.