வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டிசம்பர் மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.1,64,883 கோடி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் 1,64,883 கோடி ரூபாய் ஆக உள்ளது.
இதில்,
சிஜிஎஸ்டி மூலம் ரூ.30,443 கோடியும்
எஸ்ஜிஎஸ்டி மூலம் ரூ.37,935 கோடியும்
ஐஜிஎஸ்டி மூலம் ரூ.84,255 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.41,534 கோடியும் சேர்த்து)
செஸ் வரி மூலம் ரூ.12,249 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.1,079 கோடியும் சேர்த்து) அடங்கும்.
2023 டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ஆனது, கடந்த 2022 டிசம்பர் மாதம் வசூல் ஆன தொகையை விட 10.3 சதவீதம் அதிகம் ஆகும்.
7வதுமுறை
2023- 24 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடியை, 7வது முறையாக தாண்டியுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.14.97 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. ஆனால் 2022ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ரூ.13.40 லட்சம் கோடி தான் வசூலாகியிருந்தது.
2023 டிசம்பரில் தமிழகத்தின் ஜி.எஸ்.டி., வசூல் 9888 கோடி ரூபாய். இது, முந்தைய ஆண்டு டிசம்பரை காட்டிலும் 19 சதவீதம் அதிகம். மஹாராஷ்டிரா (26,814 கோடி ரூபாய்), கர்நாடகா (11,759 ) மாநிலங்கள் தமிழகத்தை காட்டிலும் அதிக வரி வசூலித்துள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement