இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஷிகர் தவான் மீண்டும் இந்திய அணியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையென்றால் சுமார் 500 நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் அங்கம் வகிக்க இருக்கிறார். அவரை அஃப்கானிஸ்தான் டி20 தொடருக்காக பிசிசிஐ அழைத்துள்ளது. டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணி விளையாடும் கடைசி தொடர் இதுவாகும்.
தவான் 500 நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில்..!
ஷிகர் தவான் கடந்த 2022-ல் பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடினார். அதன்பிறகு அவர் இந்திய அணியில் இருந்து எந்தவொரு போட்டியிலும் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில், அஃப்கானிஸ்தான் தொடருக்காக அவரை அணியில் சேர்ப்பது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வந்தது. இறுதியாக, அவரை அணியில் சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பைக்கு முன் தவானின் வருகை
தவான் இந்திய அணியின் முக்கியமான வீரர். அவர் ஒரு அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேன். தவானின் பெரும்பாலான ஆட்டங்கள் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்துள்ளது. இருப்பினும் இளம் வீரர்களின் வருகையால் அவரின் இடம் இந்திய அணியில் கேள்விக்குறியானது. இப்போது அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
தவானின் வருகை இந்திய அணிக்கு பலம்
டி20 உலகக் கோப்பைக்கு முன் தவான் அணியில் இணைவதால், இந்திய அணியின் வலிமை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவான் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டால், டி20 உலகக் கோப்பையிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
பிசிசிஐ அறிவிப்பு விரைவில்
இருப்பினும் இது உறுதிபடுத்தபடாத தகவல் தான். பிசிசிஐ தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. தவானை மீண்டும் 20 ஓவர் அணியில் சேர்ப்பது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. தவானுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும்.
இந்தியா vs அஃப்கானிஸ்தான் தொடர்
இந்திய அணி 11 ஜனவரி முதல் அஃப்கானிஸ்தான் அணியுடன் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் விளையாட உள்ளது. இதற்காக ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடர் டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணியின் கடைசி தொடர் ஆகும்.