டோக்கியோ: ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது என்றும், இதுவரை 242 பேரைக் காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானின் மேற்கு கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட 72 மணி நேரத்திற்குப் பிறகு ஒரு பெண், தற்போது இடிபாடுகளில் இருந்து கவனமாக மீட்கப்பட்டிருக்கிறார். மக்கள் தற்போது 34,000 பேர் வீடுகளை இழந்திருப்பதாக கூறப்படுகிறது. அதோடு அவர்கள் வெளியில் சுகாராதமற்ற முறையில் வசிப்பதால், அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அவர்களில் பலர் வயதானவர்கள் என்று கூறப்படுகிறது.