Vijay: திமுக எம்.பி கனிமொழிக்குப் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் விஜய்!

தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி-யுமான கனிமொழி, இன்று தனது 56-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு, அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்கள் பலரும் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தனர். நேற்று, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடிப் பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வந்த எம்.பி கனிமொழி, இன்று காலை சென்னைக்கு வந்தார்.

நடிகர் விஜய்

தனது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்று, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, தி.மு.க தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினைச் சந்தித்தும் வாழ்த்துப் பெற்றார். இதற்கிடையில், நடிகர் விஜய் கனிமொழியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

இதற்கு முன்னர் எம்.பி கனிமொழி வெளியிட்ட அறிக்கையில், “சென்ற மாதம் தொடர் கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சென்னையில் வெள்ளம் வடிவதற்குள் மற்றுமொரு பேரிடராக, தென் மாவட்டங்களில் வரலாறுகாணாத அளவில் பெய்த பெருமழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் பல துன்பங்களுக்கு ஆளாகினர். குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பகுதி அதிக பாதிப்புக்குள்ளானது.

கனிமொழி

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பல்வேறு கட்டங்களாக நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெள்ள பாதிப்புகளைச சீர்செய்து இயல்புநிலை திரும்பிட களத்தில் எல்லோரும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இந்தச் சூழலில் எனது பிறந்தநாள் அன்று நண்பர்கள் மற்றும் கழகத்தினர் என்னைச் சந்திக்க வருவதையும், பூங்கொத்து உள்ளிட்ட வாழ்த்துப் பொருள்கள் அனுப்புவதையும் தவிர்த்து, தேவைப்படுபவர்களுக்கு உதவிடும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.