இந்திய சந்தையில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கின் படங்கள் முதன்முறையாக இணையத்தில் கசிந்துள்ளது. சர்வதேச சந்தையில் சில வாரங்களுக்கு முன்னதாக சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டுட்டிருந்தது.
குறிப்பாக, சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஹிமாலயன் 450 அட்வெனச்சரை எதிர்கொள்ளுவதுடன் வரவிருக்கும் ஹீரோ 440 அட்வென்ச்சர் ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.
2024 KTM 390 Adventure
சில மாதங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்ட 2023 கேடிஎம் 390 டியூக் ஸ்போர்ட்டிவ் பைக்கில் இடம்பெற்றுள்ள 399cc சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 44.25 bhp பவர் மற்றும் 39Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் ஆறு வேக கியர்பாக்ஸ் பெறுகின்றது. கூடுதலாக, ஸ்லிப்ப்பர் உடன் அசிஸ்ட் கிளட்ச் உடன் க்விக் ஷிஃப்டர் பெறுகின்றது.
மிகவும் தட்டையான தோற்றத்தை பெற்றதாக அமைந்துள்ள 390 அட்வென்ச்சர் ஆனது பீரிமீயம் அட்வென்ச்சர் பைக்குளின் அடிப்படையில் வெளிவரக்கூடும். புதிதாக வரவுள்ள மாடல் 21 அங்குல அலாய் வீல் மற்றும் 19 அங்குல அலாய் வீல் உட்பட ஸ்போக்டூ வீல் வேரியண்ட் பெற்ற மாடலும் வரக்கூடும்.
புதிய எல்இடி ஹெட்லைட்டை பெற்று பெட்ரோல் டேங்க் அமைப்பில் நீண்ட எக்ஸ்டென்ஷன் பெற்று முன்புறத்தில் அட்வென்ச்சருக்கு ஏற்ற ஃபோர்க் மற்றும் மோனோஷாக் பெற உள்ளது. பெரிய 320 மிமீ முன்புற டிஸ்க் மற்றும் பின்புற 240 மிமீ டிஸ்க் பிரேக்குகளுடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற வாய்ப்புள்ளது.
5 அங்குல டிஜிட்டல் கன்சோல், லான்ச் கன்ட்ரோல் மற்றும் ரைடிங் முறைகள் பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் அம்சங்களை 2024 கேடிஎம் 390 அட்வென்ச்சர் பெற உள்ளது. 2024 EICMA அரங்கில் அல்லது ஆண்டு இறுதியில் ரூ.3.80 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடலாம்.