சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த மாடல் போன் விவோவின் ப்ளேக்-ஷிப் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.
சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இப்போது இந்தியாவில் விவோ எக்ஸ்100 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.78 இன்ச் ஸ்கிரீன், 8T LTPO AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டிமான்சிட்டி 9300 சிப்செட்
- இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- பின்பக்கத்தில் 50 + 50 + 64 மெகாபிக்சலில் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது
- 5ஜி நெட்வொர்க்
- யுஎஸ்பி டைப்-சி
- 5,000mAh பேட்டரி
- 120 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்களில் வெளிவந்துள்ளது
- இந்த போனின் விலை ரூ.63,999 மற்றும் ரூ.69,999
- 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் என சிங்கிள் வேரியண்டில் வந்துள்ள எக்ஸ்100 புரோ போனின் விலை ரூ.89,999
Introducing the all-new #vivoX100Series, where cutting-edge technology meets path-breaking innovation to deliver the #NextLevelOfImaging. Powered with multiple professional focal lengths, every shot you take will tell a unique and compelling story.
Click the link below to… pic.twitter.com/D7g9IiK9iD
— vivo India (@Vivo_India) January 4, 2024