சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 5 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியில் நீடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர தடை விதிக்க மறுத்ததுடன், அமைச்சரை பதவியில் இருந்து நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இலாகா இல்லாத அமைச்சராக […]