The search for the pirates who tried to hijack the cargo ship is intense | சரக்கு கப்பலை கடத்த முயன்ற கொள்ளையர்களை தேடும் பணி தீவிரம்

புதுடில்லி,அரபிக்கடலில் சோமாலியா அருகே இந்திய மாலுமிகளுடன் சென்ற சரக்கு கப்பலை கடத்த முயன்ற, கடற்கொள்ளையர்களை தேடும் பணியை நம் கடற்படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

அரபிக்கடலில் ஆப்ரிக்க நாடான சோமாலியா கடற்பகுதியில், லைபீரியன் நாட்டு கொடியுடன் ‘எம்.வி.லிலா நோர்போல்க்’ என்ற சரக்கு கப்பல் கடந்த 4ம் தேதி பயணித்தது.

பிரேசில் நாட்டின் டுஅகோ துறைமுகத்தில் இருந்து பஹ்ரைனின் கலிபா பின் சல்மான் துறைமுகம் நோக்கி சென்ற அக்கப்பலில், இந்திய மாலுமிகள் 15 பேர் உட்பட 21 பேர் இருந்தனர்.

சோமாலியாவுக்கு கிழக்கே 300 கடல் மைல் தொலைவில் சென்றபோது, அக்கப்பலில் ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்கள் ஆறு பேர் அத்துமீறி நுழைந்து, கப்பலை கடத்தினர்.

பிரிட்டன் கண்காணிப்பகம் அளித்த தகவலின்படி, அரபிக்கடல் பகுதியில் ரோந்து பணியில் இருந்த, நம் கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்., சென்னை போர்க்கப்பல், லைபீரிய நாட்டு கப்பலை நெருங்கியது.

கடற்படை வீரர்களின் வருகையை அடுத்து, கடற்கொள்ளையர்கள் தப்பிச் சென்றதையடுத்து, கப்பலில் இருந்த 15 இந்திய மாலுமிகளும், ஆறு பிலிப்பைன்ஸ் மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதன் வாயிலாக, கடத்தல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய மாலுமிகள் சென்ற கப்பலை கடத்த முயன்ற கடற்கொள்ளையர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதையொட்டி, வடக்கு அரபிக்கடல் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வலம் வரும் கப்பல்களில், நம் கடற்படை அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.

கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய இந்திய மாலுமிகள் உட்பட 21 பேரையும் மீட்டது தொடர்பான வீடியோ பதிவை, நம் கடற்படையினர் நேற்று முன்தினம் வெளியிட்டனர். அப்போது, மீட்கப்பட்ட நபர்கள், ‘பாரத் மாதா கீ ஜே!’ என கூறியபடி, நம் கடற்படையினருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த வீடியோ பதிவானது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

‘பாரத் மாதா கீ ஜே!’


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.