சியோல்,
தென்கொரியாவின் யோன்பியாங் தீவுப்பகுதியை நோக்கி, வடகொரியா நேற்று திடீர் தாக்குதல் நடத்தியது. சுமார் 200-க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகள் முழங்கியதாக கூறப்படும் நிலையில், தீவில் வசிக்கும் மக்களை இடம்பெயருமாறு தென்கொரியா உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்று மீண்டும் யோன்பியாங் தீவுப்பகுதியை நோக்கி வடகொரியா தாக்குதல் நடத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. பதிலடியாக தென்கொரியாவும் பயிற்சி என்ற போர்வையில் 400 ரவுண்டுகள் சுட்டதாக உள்ளூர் ஊடகங்கள் பதிவு செய்திருக்கின்றன.
தொடர்ந்து வடகொரியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால், மேற்கு கடல் எல்லைக்கு அருகில் உள்ள ஐந்து பெரிய தீவுகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தென்கொரியா உத்தரவிட்டுள்ளது.