
பிரித்விராஜ் – கஜோல் புதிய கூட்டணி
மலையாள நடிகர் பிரித்விராஜ் மலையாளத்தில் முக்கிய நடிகராக இருந்தாலும் அவ்வப்போது தமிழ், தெலுங்கு என மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஹிந்தி மொழி படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் கரண் ஜோகர் தயாரிப்பில் புதிதாக உருவாகும் ஹிந்தி படத்தில் பிரித்விராஜ், கஜோல் இருவரும் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். கயோ சேல்ரானி என்பவர் இயக்குகிறார். காஷ்மீர் பின்னணியில் நடக்கும் த்ரில்லர் படமாக உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.