பெங்களூரு : ஜாதி வாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை குழுத் தலைவர் ஜெயபிரகாஷ் ஹெக்டேயின் பதவிக் காலத்தை அரசு நீட்டித்து உள்ளதால், அறிக்கை வெளியாவது தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதன் முறையாக சித்தராமையா முதல்வராக இருந்தபோது, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த, 2015ல் காந்தராஜ் தலைமையில் கமிட்டி அமைத்தார். பல்வேறு காரணங்களால், இந்த அறிக்கையை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
கடந்தாண்டு கர்நாடகத்தில் மீண்டும் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் அரசு ஆட்சியை பிடித்தது. நவம்பரில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கு பல தரப்பிலும், குறிப்பாக வீரசைவ லிங்காயத் சமுதாயத்திடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
அப்போது கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் நல தலைவராக இருந்த ஜெயபிரகாஷ் ஹெக்டேவிடம், இந்த அறிக்கையை ஆய்வு செய்து, புதிய அறிக்கையை தயாரிக்க உத்தரவிட்டது. அவரின் பதவிக் காலம் நவம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால், அவரின் பதவிக் காலத்தை நாளை வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டிருந்தது.
அறிக்கை சமர்ப்பிக்க ஜெயபிரகாஷ் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து, மாநில அரசு, அவரின் பதவி காலத்தை, பிப்., 15ம் தேதி வரை நீட்டித்து நேற்று உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement