உத்தேச நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக அமைச்சரவையில் எட்டப்பட்ட தீர்மானங்கள் வருமாறு..
2023/2024 பெரும்போக நெல் கொள்வனவுக்கான சலுகை வட்டிவீதத்தின் கீழ் அரச மற்றும் தனியார் வங்கிகள் வாயிலாக மடபண கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த 05 வருடகால போகங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான விளைச்சலை அடிப்படையாகக் கொண்டு கடன் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. உத்தேச கடன் திட்டத்தின் கீழ் 09 பில்லியன் ரூபாய்கள் கடன் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு உயர்ந்த பட்சம் 50 மில்லியன் ரூபாய்களும், நெற் களஞ்சிய உரிமையாளர்கள் மற்றும் மொத்த நெல் கொள்வனவாளர்களுக்கு உயர்ந்த பட்சம் 25 மில்லியன்களுமாக கடன் வழங்கப்படும். கடன் மீளச் செலுத்தும் காலப்பகுதி 180 நாட்களாகும். வருடாந்த வட்டி வீதம் 15மூ வீதமாவதுடன், அதில் 4மூ வீதம் திறைசேரியால் பங்களிப்புச் செய்யப்படும். அதற்கமைய, உத்தேச நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.