Shooting in land dispute: 52 dead in Sudan | நிலத்தகராறில் துப்பாக்கிச்சூடு: சூடானில் 52 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஜுபா: வட ஆப்ரிக்க நாடுகளான சூடான் மற்றும் தெற்கு சூடான் எல்லையில் அமைந்துள்ள எண்ணெய் வளம் கொண்ட அபேயில் ஆதிக்கம் செலுத்த இரண்டு நாடுகளும் விரும்புகின்றன. கடந்த 2011ல் சூடானில் இருந்து தெற்கு சூடான் சுதந்திரம் பெற்ற பின்பும், இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை.

ஆப்ரிக்க யூனியன், அபேய் உரிமை தொடர்பாக பொது ஓட்டெடுப்பை நடத்த வேண்டும் என பரிந்துரைத்தது. ஆனால் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் ஓட்டளிக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.

அபேய் தற்போது தெற்கு சூடானின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தெற்கு சூடான் தன் படைகளை அபேய்க்கு அனுப்பியதில் இருந்து இருநாடுகளின் எல்லை மோதல்கள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, இங்கு ஐ.நா., பாதுகாப்புப் படை இயங்கி வருகிறது. எனினும், இங்கு இனக்கலவரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு ஆயுதங்களுடன் நுழைந்த நபர்கள் சிலர், கிராம மக்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில், ஐ.நா.,வின் பாதுகாப்புப் படை வீரர் உட்பட 52 பேர் பலியாகினர்; 64 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவத்திற்கு ஐ.நா., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

எதற்காக, இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்து விபரம் தெரியவில்லை. எனினும், இங்குள்ள நிலப்பிரச்னைக்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.