லக்னோ சமாஜ்வாதி கட்சி தனது நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி இறுதியான நிலையில் 16 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று வெளியிட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி அதிக வாக்குகளைப் பெற்ற இடங்களின் வேட்பாளர்கள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளனர். அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் மெயின்புரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். […]
