`பழனி கோயிலுக்குள் இந்து அல்லாதவர் நுழையத் தடை’ – வழக்கின் விவரமும் உயர் நீதிமன்ற கிளை உத்தரவும்!

பழனியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மிகவும் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோயிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மதுரை உயர்நீதிமன்றக்கிளை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் இந்து அறநிலையத்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி, 1947-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தில், இந்து அல்லாத எந்த ஒரு சமயத்தினரும் இந்து கோயிலுக்குள் நுழைவதை தடுக்கின்றது.

இந்து அல்லாத எவரும் கோயிலுக்குள் நுழைய தடுக்கும் வண்ணம் இந்த சட்டம் அப்பொழுது நிறைவேற்றப்பட்டது. தெய்வத்தின் மீது நம்பிக்கை இல்லாத நபர்களும், மாற்று மதத்தை நம்புகிற ஒருவர் திருக்கோயிலுக்குள் நுழைய வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறான சூழலில் பழனி முருகன் கோயிலில் ‘இந்து அல்லாத நபர்கள் திருக்கோயிலுக்குள் நுழைய தடை’ என்ற அறிவிப்பு பலகை தற்போதைய செயல் அலுவலரால் நீக்கப்பட்டுள்ளது. இது இந்து மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையிலும், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் வகையிலும் உள்ளது.

பழனி

இந்நிலையில் இந்து அல்லாத சிலர் கோயிலுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர். அதன் பிறகு இந்த பதாகைகள் நீக்கப்பட்டுள்ளது. எனவே பழனி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பழனி முருகன் மற்றும் உப கோயிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்க வேண்டும்.

‘இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழையத் தடை’ என்ற பதாகையை மீண்டும் வைக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்ததபோது, இந்து அறநிலையத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அனந்த பத்மநாபன் மற்றும் அருண் சுவாமிநாதன் ஆகியோர் ஆஜராகி விரிவான வாதம் செய்த நிலையில் இந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

பழநி தண்டாயுதபாணி கோயில்

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஸ்ரீமதி, “இந்து அல்லாதவர்களை கோயிலின் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது. ‘இந்து அல்லாதவர்கள் மற்றும் இந்து கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்ற பதாகையை கோயிலில் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும்.

மாற்று மதத்தை சார்ந்தவர்கள் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் கோயிலில் இதற்காக ஒரு பதிவேடு வைக்க வேண்டும், அந்த பதிவேட்டில் இந்த சுவாமியின் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என உத்திரவாத உறுதிமொழி எழுதிக் கொடுத்த பின்பு கோயிலுக்குள் அனுமதிக்கலாம்” என்று உத்தரவிட்ட நீதிபதி, “இந்து அறநிலையத்துறை ஆணையர் கோயிலின் ஆகம விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்” எனவும் உத்தரவு பிறப்பித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.