அமேசான் ஓடிடி தளத்தில் இனி விளம்பரமும் வரும்…

திரைப்படம் பார்ப்பது, வெப் சீரிஸ்கள் பார்ப்பது ஆகியவைற்றை இடையில் எந்த இடைஞ்சலும் இல்லாமல் பார்க்கத்தான் ரசிகர்கள் விரும்புவார்கள். ஓடிடி தளங்களுக்குப் பெரும் வரவேற்பு கிடைக்க அதுவும் ஒரு காரணமாக இருந்தது.

இந்நிலையில் இந்தியாவில் உள்ள முன்னணி ஓடிடி நிறுவனங்களில் ஒன்றான அமேசான் ஓடிடி நிறுவனம் நேற்று முதல் தனது தளத்தில் விளம்பரங்களை இடை நுழைத்துள்ளது. இருந்தாலும் குறைவான நேரத்தில்தான் விளம்பரங்கள் இடம் பெறும் என்றும் தெரிவித்துள்ளது. அந்த விளம்பர இடைஞ்சலும் தேவையில்லை என்றால் மாதத்திற்கு கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளில் ஆண்டின் துவக்கத்தில் அமலானது. அடுத்து ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இத்தாலி,. மெக்சிகோ, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அமல்படுத்தப்பட உள்ளது. ஆனால், இந்தியாவில் அமல்படுத்துவது பற்றி எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை.

இந்தியாவில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஏற்கெனவே விளம்பரங்கள் ஒளிபரப்பு உள்ளது. விரைவில் அமேசானிலும் வரலாம் என்றே தெரிகிறது.

கூடுதல் கட்டணம் கொடுத்து விளம்பரம் இல்லாமல் மக்கள் பார்ப்பார்களா அல்லது பணத்தை சேமிக்க விளம்பரத்துடன் பார்ப்பார்களா என்பது அறிமுகமாகும் போது தெரியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.