19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் நேற்றைய (30) முதல் போட்டியில் இலங்கை அணி கடும் போட்டிக்குப் பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் 3 விக்கெட்டுக்களால் தோல்வியடைந்தது.
தென்னாப்பிரிக்காவின் கிம்பர்லியில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில்; வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இளைஞர் அணி, 50 ஓவர்கள் முடிவில் 231 ஓட்டங்களைப் பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி 3 பந்துகள் மீதமிருந்த நிலையில், 7 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது.
மேற்கிந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸ்டீவ் வெடர்பர்ன் 61 ஓட்டங்களை எடுத்தார், மேலும் மூன்றாவது விக்கெட்டுக்கு வெடர்பர்ன் மற்றும் ஜோர்டன் ஜொன்சன் 86 ஓட்டங்களைப் பெற்றனர். எனினும் கடைசி நிமிடத்தில் நேதன் சீலி ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்களைப் பெற்று மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். பந்துவீச்சில் தினுர களுபஹன, விஷ்வ லஹிரு மற்றும் அணித்தலைவர் சினெத் ஜயவர்தன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைப் பெற்றனர்.
போட்டியில் தோல்வியடைந்த போதிலும், இலங்கை அணியின் தினுர கலுபஹன துடுப்பாட்டத்தில் சிறப்பாக ஆடி, நேற்றைய தினம் 53 ஓட்டங்களை பெற்றார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் அவர் அடித்த மூன்றாவது அரை சதம் இதுவாகும்.
இலங்கை இளைஞர் அணி – 231 (50 ஓவர்கள்) தினுர கலுபஹன 53, மல்ஷ தருபதி 42, சுபுன் வடுகே 31, புலின பெரேரா 24 (ரனைகோ ஸ்மித் 47/4, நேதன் எட்வர்ட்ஸ் 47/2)
மேற்கிந்திய தீவுகள் – 232/7 (49.3 ஓவர்கள்) ஸ்டீவ் வெடர்பர்ன் 61, ஜோர்டன் ஜோன்சன் 39, ஸ்டீபன் பெஸ்கல் 33, நேதன் சீலி ஆட்டமிழக்காமல் 27 (விஷ்வ லஹிரு 32/2, தினுர கலுபஹன 39/2, சினெத் ஜெயவர்தன 39/2)