இவர் மட்டும் இருந்திருந்தால் இந்தியா முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றிருக்காது – மைக்கேல் வாகன்

ஹைதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் விராட் கோலி இல்லை. அவர் சொந்த காரணங்களுக்காக அணியிலிருந்து விலகி இருக்கிறார். இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து பேசியிருக்கும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், விராட் கோலி இருந்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். 

மைக்கேல் வாகன் பேசும்போது, “இந்தியாவின் தோல்விக்கு விராட் கோலியின் இல்லாதது ஒரு முக்கிய காரணம்” என்று வோன் கூறினார். “விராட் கோலி சிறந்த திட்டமிடுபவர். அவர் போட்டியின் சூழலை நன்கு புரிந்துகொள்கிறார். அவர் எப்போதும் சிறந்த முடிவுகளை எடுக்கிறார். விராட் கோலி இருந்திருந்தால் இந்தியா முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்றிருக்கலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மாவை மைக்கேல் வாகன் விமர்சித்தார். “ரோஹித் சர்மா ஒரு சிறந்த வீரர். ஆனால் அவரது கேப்டன்சி சராசரியாக உள்ளது” என்று மைக்கேல் வாகன் கூறினார். “விராட் கோலியின் கேப்டன்சியில் இந்தியா அதிக வெற்றிகளைப் பெற்றது. ரோஹித் சர்மாவை விட விராட் கோலி சிறந்த கேப்டன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸின் முடிவில் 190 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதனால் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என எல்லோரும் நினைத்திருந்த நேரத்தில் இங்கிலாந்து அணியின் ஒல்லி போப் நங்கூரம் போல் நிலைத்து நின்று விளையாடி இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 230 ரன்கள் முன்னிலை பெற வைத்தார். 

இதனையடுத்து விளையாடிய இந்திய அணியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. அவர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் இந்திய அணி தோல்வியை தழுவ நேரிட்டு, 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றிருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே இரண்டாவது டெஸ்ட் 2 ம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.