சுதந்திர தின கொண்டாட்ட ஒத்திகையில் கலந்து கொண்ட போது காயமடைந்த நான்கு பரசூட் வீரர்களினதும் உடல்நிலை நன்றாக இருப்பதாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ தெரிவித்தார்.
76 ஆவது சுதந்திர தின நிகழ்வு; குறித்து அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மூன்று விமானப்படை வீரர்களும் மற்றும் ஒரு இராணுவ வீரரும்; விபத்தில் சிக்கினர். அவ்விடத்தில் ஒருவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டதாகவும், ஏனைய வீரர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த விமானப்படை வீரர்கள், தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறி இராணுவ வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன, இராணுவ வீரர் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.