இரத்துச் செய்யப்பட்ட உயர் தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்திற்கான வினாப்பத்திரத்திற்கு பதிலாக இடம்பெறவுள்ள புதிய பரீட்சை (01) நாளை இடம்பெறவுள்ளது.
பரீட்சைக்கு தோற்றுவதற்கான அனுமதிப் பத்திரத்தை www.doenets.lk இணையத்தளத்தில் பிரவேசித்துப் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை விண்ணப்பதாரிகளுக்கு தற்போது அனுமதிப் பத்திரங்கள் அனுப்பப் பட்டுள்ளதுடன் அவை கிடைக்கப்பெறாதவர்கள் மாத்திரம் இணையத் தளத்தில் பிரவேசித்து அனுமதிப் பாத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பரீட்சார்த்திகள் இரத்துச் செய்யப்பட்ட பரீட்சைக்காக தோற்றிய பரீட்சை நிலையத்திலேயே புதிய வினாப் பத்திரத்திற்காக தோற்றவதாயின் அவ்வாறு அனுமதிப் பத்திரம் அவசியமில்லை.
இம்முறை உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாப் பத்திரம் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதுடன் அவ்வினாப் பத்திரத்தை இரத்துச் செய்வதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பின்னர் அந்தப் பாடத்திற்கு மாத்திரம் விசேட பரீட்சையாக பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நடாத்துவதற்கு அத்திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கிணங்க, நாளை(01) விவசாய விஞ்ஞான பத்திரத்தின் இரண்டாம் பகுதி நாளை முற்பகல் 8.30 மணியிலிருந்து 11.40 வரையும், முதலாம் பகுதி பிற்பகல் 1.00 மணியிலிருந்து 3.00 மணி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.