வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோலாலம்பூர்: மலேசியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்று கொண்ட சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர், 300 கார்கள், தனி ராணுவம் மற்றும் ஜெட் விமானங்கள் வைத்திருக்கிறார்.
மலேசியா நாட்டின் அதிகாரப்பூர்வமாக பிரதமர் இருந்தாலும், அங்கு இன்னும் மன்னர் அதிகாரம் நீடித்து வருகிறது. இந்நாட்டின் நீதிமன்றங்கள், போலீசார் ஆகியவற்றால் கொடுக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்வதற்கும் மன்னருக்கு அதிகாரம் இருக்கிறது. இந்நிலையில் மலேசியாவின் 17வது புதிய மன்னராக அரச குடும்பத்தை சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அரசை ஆதரிப்பேன்
பதவியேற்ற பின்னர் அவர் கூறியதாவது: ‛‛நான் அரசாங்கத்தை ஆதரிப்பேன். ஆனால் அவர்கள் தவறாக எதாவது செய்கிறார்கள் என்று நினைத்தால் அது குறித்து எச்சரிப்பேன்” என்றார்.
சொத்து மதிப்பு
புதிய மன்னர் சுல்தானுக்கு சொத்துக்கள் மலேசியாவை தவிர பிற இடங்களிலும் அதிகமாக உள்ளன. சொத்து மதிப்பு 5.7 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். மேலும், அவர் 300 கார்கள், தனி ராணுவம் மற்றும் ஜெட் விமானங்கள் வைத்திருக்கிறார்.
தனியார் மற்றும் பொது நிறுவனங்களில் உள்ள முதலீடுகள் மட்டுமே 588 மில்லியன் டாலர். சிங்கப்பூரில் வைத்திருக்கும் சொத்து மதிப்பு மட்டும் 4 பில்லியன் டாலர் ஆகும். இதனை தவிர ரியல் எஸ்டேட், சுரங்கத் தொழில்கள், தொலைத்தொடர்பு மற்றும் பாமாயில் உற்பத்தி என பல்வேறு தொழில்கள் உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement