ஏஐ மூலம் டீப் பேக் வீடியோ : அபிராமி கோபம்

சமீபகாலமாக ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் டீப் பேக் வீடியோக்கள் அதிகமாக வெளியாகி கொண்டிருக்கின்றன. ராஷ்மிகா மந்தனா, கத்ரினா கைப், ஆலியா பட், கஜோல் ஆகியோரின் போலியான ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. தற்போது நடிகை அபிராமி வெங்கடாசலத்தின் டீப் பேக் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அவர் நிர்வாணமாக சித்தரிக்கப்பட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அபிராமி வெங்கடாசலம் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் சந்தித்த மோசமான மனிதர்களுக்கு கூட இப்படி நடக்க கூடாது. இதன் மூலம் யாரையும் மோசமாக காட்டலாம் என்ற நிலைமை அச்சத்தை தருகிறது. இதுபோன்ற வீடியோவை உருவாக்கியவன் குற்றவாளி என்றால் அதை பகிர்ந்து சந்தோஷப்படுபவன் அவனை விட பெரிய குற்றவாளி. இவர்களுக்கு பிரபஞ்சம் தண்டனை கொடுக்கும். நான் தைரியசாலி. எனது வலிமையை தகர்க்க முடியாது. பெண்களின் நிர்வாண வீடியோக்களை பார்ப்பவர்களுக்கு என்ன மகிழ்ச்சி கிடைக்கிறது என புரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அபிராமி வெங்கடாசலம் பிரபலமானவர். நோட்டா, நேர்கொண்ட பார்வை, ராக்கெட்டரி, துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.