வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெருசலேம்: இஸ்ரேல்-ஹமாஸ் போரால் இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மறு கட்டமைப்பு செய்ய இந்தியாவிலிருந்து 10 ஆயிரம் தொழிலாளர்கள் இஸ்ரேல் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இப்போரில் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் பெரும் சேதமடைந்தன. இதனை மறுகட்டமைப்பு செய்ய இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளது எனினும் அந்நாட்டில் மனித வளம் போதிய அளவு இல்லை என கூறப்படுகிறது. 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் தேவை என்பதால் வேறு நாட்டிலிருந்து ஆட்களை கொண்டுவர முடிவு செய்துள்ளது.
இதையடுத்து இஸ்ரேல் கட்டுமான சங்கத்தினரின் வேண்டுகோளின்படி இந்தியாவிலிருந்து 10 ஆயிரம் தொழிலாளர்கள் பல்வேறு கட்டங்களாக இஸ்ரேல் செல்ல உள்ளனர். இதில் ஒரு வாரத்தில் 700 மற்றும் 1000 பேர் என இஸ்ரேல் செல்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement