கோலாலம்பூர் மலேசிய நாட்டின் புதிய மன்னராக சுல்தான் இப்ராகிம் பதவி ஏற்றுள்ளார். மலேசியாவின் அரசியலமைப்பு முடியாட்சியாகும். அங்கு ஒன்பது சுல்தான்கள் அல்லது ஆட்சியாளர்கள், தங்கள் மாகாணங்களின் தலைவர்களாகவும், மதத் தலைவர்களாகவும் செயல்படுகின்றனர். சுழற்சி முறையில் இவர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மன்னராகப் பதவியேற்கின்றனர். அவ்வகையில் இன்று சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர் மலேசியாவின் 17-வது மன்னராகப் பதவியேற்றார். அவரது பதவி ஏற்பு விழா கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது. தொலைக்காட்சிகளில் இந்த விழா நேரடியாக ஒளிபரப்பு […]