100 கோடி கிளப்பில் இணைந்த 'பைட்டர்'
ஹிருத்திக் ரோஷன், தீபிகா படுகோன், அனில் கபூர், கரண் சிங் நடித்த ஹிந்தி படம் 'பைட்டர்'. சித்தார்த் ஆனந்த் இயக்கினார். சுமார் 250 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் கடந்த 25ம் தேதி குடியரசு தினத்தையொட்டி வெளியானது. படம் வெளியான முதல் இரண்டு நாளிலேயே 100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. நேற்றைய நிலவரப்படி படம் 150 கோடி வசூலித்தது. மொத்த வசூல் 500 கோடியை தாண்டும் என்கிறார்கள். ஓடிடி உரிமம் 100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஹிருத்திக் ரோஷனின் கேரியரில் ஒரே நாளில் ரூ.40 கோடி வசூலித்த 2வது படமாக பைட்டர் உள்ளது. 100 கோடியை தாண்டும் ஹிருத்திக் ரோஷனின் 14வது படம் இது. இதற்கு முன்பு கபி குஷி கபி கம் , க்ரிஷ், தூம், ஜோதா அக்பர், ஜிந்தகி நா மிலேகி டோபரா, அக்னிபத், க்ரிஷ் 2, பேங் பேங், மொகஞ்சதாரோ, காபில், சூப்பர் 3012, வார், விக்ரம் வேதா படங்கள் 100 கோடியை தாண்டி வசூலித்த படங்கள்.