காஞ்சிபுரம் இன்று காஞ்சிபுரத்தில் 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். கோவில்கள் அதிகம் உள்ள நகரங்களில் காஞ்சிபுரம் மிகவும் முக்கியமானதாகும். அங்குள்ள புகழ் பெற்ற கச்சபேஸ்வரர் கோவிலில் இன்று குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. எனவே காஞ்சிபுரம் நகரில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், ”இன்று காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு இக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட […]