கோலாலம்பூர்: மலேஷியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்றுள்ள சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர், 300 சொகுசு கார்கள், ஏராளமான ஜெட் விமானங்கள் மற்றும் சொந்தமாக ராணுவப் படை வைத்துள்ளது, சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான மலேஷியா கடந்த 1957ல் சுதந்திரம் பெற்றது முதல், தேர்தல்கள் நடத்தப்பட்டு பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும், அங்கு இன்னும் மன்னராட்சி நீடித்து வருகிறது.
அந்த வகையில், நாட்டின் 17வது மன்னராக ஜோகூர் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் பொறுப்பேற்றுள்ளார்.
மன்னர் சுல்தானுக்கு, 47,000 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. நிலம், சமையல் எண்ணெய், ரியல் எஸ்டேட், தொலை தொடர்பு, சுரங்கத் தொழில் என பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளார்.
மலேஷியாவின் முக்கிய மொபைல் போன் நிறுவனங்களில் ஒன்றான, ‘யு மொபைல்’ நிறுவனத்தில் இவருக்கு 24 சதவீத பங்குகள் உள்ளன.
சுல்தான் இப்ராஹிமின் அலுவலக ரீதியான இல்லமான ‘இஸ்தானா புக்கிட் செரீன்’லில் 300க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, சர்வாதிகாரி ஹிட்லர் பரிசளித்தது. தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் 737’ உள்ளிட்ட ஜெட் விமானங்களும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இவரின் சொத்துக்கள் மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக தனியார் ராணுவமும் இயங்கி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement