பத்ம விருதில் பாரபட்சம் : சோனு சூட்டுக்கு ஆதரவாக பூனம் கவுர் குரல்

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளில் பாலிவுட் நடிகர் சிரஞ்சீவி, மறைந்த நடிகர் விஜயகாந்த் உள்ளிட்ட பலருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. பலரும் நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்டோருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தகுதியான நபரான சோனு சூட்டுக்கு இந்த பத்ம விருது வழங்கப்படாதது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை பூனம் கவுர்.

தமிழில் உன்னைப்போல் ஒருவன், ஆறு மெழுகுவர்த்திகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பூனம் கவுர் இந்த பத்ம விருதுகள் பற்றி குறிப்பிடும்போது, “பாலிவுட் ஹீரோ சோனு சூட் இந்த பெருமைமிகு விருதுக்கு தகுதியான நபர். வேறு எந்த ஒரு ஹீரோவும் கொரோனா காலகட்டத்தில் இவர் செய்தது போல பல்வேறு உதவிகளை செய்யவில்லை. ஆனால் அதிகார மையத்தில் இருப்பவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டு பழகத் தெரியாததால் அவருக்கு இந்த விருது கிடைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

சிறந்த மனிதரான சோனு சூட்டுக்கு விருது கிடைக்கவில்லை என எனது ஆதங்கத்தை பூனம் கவர் வெளிப்படுத்தி இருந்தாலும் அவரது இந்த கருத்து தெலுங்கு திரை உலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாலிவுட்டில் நடிகர் சல்மான்கானின் குடும்பம் தனது வளர்ச்சியை பத்து வருடங்களுக்கு மேலாக தடுத்தது என ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை இவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.