கங்குவா சூர்யா புதிய தோற்றம்
சிவா இயக்கத்தில் சூர்யா 'கங்குவா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யா உடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
கடந்த பல மாதங்களாக பலகட்ட படப்பிடிப்புகளுக்கு பிறகு சமீபத்தில் சூர்யா சம்மந்தப்பட்ட காட்சிகள் படப்பிடிப்பு முடிவடைந்தது. தற்போது கங்குவா படத்தில் நிகழ்கால சூர்யாவின் தோற்றத்தின் போட்டோ ஷூட் ஸ்டில் ஒன்றை படக்குழு சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்த போட்டோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.