சென்னை: நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான சிங்கப்பூர் சலூன் பரவலாக பாராட்டுக்களையும் வசூலையும் குவித்து வருகிறது. இந்தப் படத்திற்கு ஆர்ஜே பாலாஜி, இயக்குநர் கோகுல் உள்ளிட்டவர்கள் சிறப்பான பிரமோஷன்களை கொடுத்திருந்தனர். இதுவும் படம் ரசிகர்களை அதிகளவில் கவர காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் படத்தின் சக்சஸ் மீட்டை தற்போது படக்குழுவினர் நடத்தியுள்ளனர்.