கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே காலமானார்
பிரபல கவர்ச்சி நடிகையும், மாடலுமான பூனம் பாண்டே(32) புற்றுநோய் பாதிப்பால் காலமானார். கர்ப்பப்பை புற்றுநோயால் அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் பூனம் பாண்டே. மாடல் அழகியான இவர், கடந்த 2011ல் இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது பிரபலமான இவர் தொடர்ந்து மாடலிங் செய்து வந்தார். கவர்ச்சியான இன்னும் சொல்லப்போனால் ஆபாசமான போட்டோக்களை எல்லாம் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்றார். ‛நஷா' என்ற பாலிவுட் படத்தில் நடித்து நடிகையான இவர் சில படங்களில் நடித்தும் உள்ளார்.
இந்நிலையில் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த இவர் அதற்கான சிகிச்சையில் இருந்த நிலையில் இப்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக பூனம் பாண்டேவின் இன்ஸ்டா தளத்தில் அவரது குழுவால் வெளியிடப்பட்ட பதிவில், ‛‛இன்று காலை எங்களுக்கு கடினமான சூழல். எங்கள் அன்புக்குரிய பூனத்தை கர்ப்பப்பை புற்றுநோயால் இழந்துவிட்டோம் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்'' என குறிப்பிட்டுள்ளனர்.
பூனம் பாண்டேவின் திடீர் மறைவு அவரது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.