அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பிக்கப்பட உள்ளன.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் 22.12.2023 வெள்ளிக்கிழமை முடிவடைந்ததுடன், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் கடந்த வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவிருந்ததது.
ஆனால் உயர்தர பரீட்சசயின் விவசாய விஞ்ஞானம் பாடத்திற்கான வினாத்தாள் மீண்டும் ஒருமுறை நடத்தப்பட வேண்டியிருந்ததால், பாடசாலைகளுக்கான விடுமுறையை நாளை வரை பிற்போட கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.
அதனை தொடர்ந்து அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.