புதுடில்லி, “சென்னை – பெங்களூரு பசுமை விரைவுச் சாலை பணிகள் இந்த ஆண்டு டிசம்பருக்குள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும்,” என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
லோக்சபாவில் நேற்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:
சென்னை – பெங்களூரு பசுமை விரைவுச்சாலை திட்டத்தை பொறுத்தவரை, இந்தாண்டு டிசம்பருக்கு முன் முடிக்க முயற்சி செய்து வருகிறோம்.
இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தால், சென்னை – பெங்களூரு பயண நேரம் இரண்டு மணி நேரமாக குறையும்.
திட்டத்தை விரைவுபடுத்துவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுடன் பேச்சு நடத்த தயாராக உள்ளோம்.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு தேவையான கட்டுமான பொருட்களான ஜல்லி கற்கள் உள்ளிட்டவை குறித்த நேரத்தில் கிடைப்பதில் பிரச்னை உள்ளது.
இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலினுடன் பேசி உள்ளேன்.
சாலை அமைக்க தேவையான கட்டுமானப் பொருட்கள் கிடைக்காமல் எப்படி சாலை அமைக்க முடியும்? கட்டுமானப் பொருட்கள் மற்றும் சுரங்கம் அமைப்பதற்கு மாநில அரசுகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement