சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை கவனத்திற்கு உள்ளாகி வருகின்றன. கடந்த ஆண்டில் வெளியான மாவீரன், கடந்த ஜனவரியில் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான அயலான் என அடுத்தடுத்த படங்களின் வெற்றி அவரை மீண்டும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நாயகன்தான் என நிரூபித்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
