மட்டக்களப்பு வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு (09) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது அரச காணிகளில் குடியிருந்து அவற்றை பராமரிக்கின்ற மக்களுக்கு காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் மாகாண காணி நிருவாகத் திணைக்களத்தின் அனுமதியுடன் காணிக் கச்சேரிகளை நடாத்திய பயனாளிகளுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு பிரதேச செயலாளர் எஸ். எச் முஸம்மில் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.