ராஜ்கோட்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் வீரர்களான ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும், கில் ரன் எதுவும் அடிக்காமலும், படிதார் 5 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை ரோகித் மற்றும் ஜடேஜா ஜோடி சேர்ந்து காப்பாற்றினர். இருவரும் சதம் அடித்து அசத்தினர். இதன் மூலம் முதல் நாளில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்துள்ளது. ஜடேஜா 110 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ரோகித் 131 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இந்த போட்டியில் ரோகித் மற்றும் ஜடேஜா 4-வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து 204 ரன்கள் குவித்தனர். இதன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 4-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பில் அதிக ரன்கள் எடுத்த இணைகளின் சாதனை பட்டியலில் சச்சின் – கங்குலி (முதல் இடம்) வரிசையில் 3-வது இடத்தை பிடித்துள்ளனர்.
அந்த பட்டியல்;-
1. சச்சின் – கங்குலி – 249 ரன்கள்
2. விஜய் மஞ்ரேகர்- விஜய் ஹசாரே- 222 ரன்கள்
3. ரோகித் – ஜடேஜா – 204 ரன்கள்
4. முகமது அசாருதீன் – மொகிந்தர் அமர்நாத் – 190 ரன்கள்
5. முகமது அசாருதீன் – சஞ்சய் மஞ்ரேகர்- 189 ரன்கள்.