டில்லி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட 7 மத்திய அமைச்சர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை. வரும் 27ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாகும் 56 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்றுடன் இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி போட்டியிடுகிறார். மேலும் குஜராத்தில் இருந்து பாஜக தலைவர் நட்டா போட்டியிடுகிறார் . தற்போது காலியாகும் 56 இடங்களில் 28 இடங்கள் பாஜகவைச் சேர்ந்தது ஆகும். இவ்வாறு பதவிக்காலம் காலியாகும் 28 பேரில் 4 பேருக்கு மட்டுமே மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கி இருக்கிறது. இவர்களில் 2 பேர் மத்திய அமைச்சர்கள் ஆவார். அவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகன் ஆவார் . இவருக்கு மத்தியப் பிரதேசத்தில் இருந்து போட்டியிட […]