சென்னை அமலாக்கத்துறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமி வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர் ,அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2-வது முறையாக ஜாமீன் கேட்டுத் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை விசாரித்து வருகிறார். இந்த வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அமலாக்கத்துறை, ”தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததைத் தவிர வழக்கில் வேறு எந்த மாற்றமும் இல்லை. எனவே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைக்கக் கூடும். நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காத […]