வன விலங்கு – மனித எதிர்கொள்ளல்; முதல்வருக்கு ராகுல் கடிதம் – வயநாட்டில் டிஜே பார்ட்டிக்கு தடை

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் வன விலங்கு – மனித எதிர்கொள்ளல் காரணமாக மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. வயநாடு மாவட்டம் மானந்தவாடி படமலை பகுதியைச் சேர்ந்த அஜீஸ் என்பவரது வீட்டு காம்பவுண்டை உடைத்தபடி கடந்த 10-ம் தேதி காலையில் காட்டுயானை ஒன்று புகுந்தது. யானையைக் கண்டு அங்குள்ளவர்கள் பயந்து ஓடினர். அவர்களை துரத்திச் சென்ற யானை மிதித்ததில் அஜீஸ் இறந்தார்.

பேலூர் மக்னா யானை என அழைக்கப்படும் அந்த காட்டு யானையை ஏற்கனவே கர்நாடக வனத்துறை பிடித்து ரேடியோ காலர் பொருத்தி மீண்டும் வனத்தில் விடப்பட்டிருந்தது. ரேடியோ காலரை கண்கணித்து யானை வருகையை வனத்துறை தடுக்க தவறியதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியதுடன் சப் கலெக்டர் அலுவலகம் முன்பு அஜீஸின் உடலை வைத்து போராட்டமும் நடத்தினர். பேலூர் மக்னா யானையை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

யானை மிதித்ததில் இறந்த அஜீஸ்

அதுபோன்று, கடந்த டிசம்பர் மாதம் 9-ம் தேதி வயநாடு சுல்தான் பத்திரியை அடுத்த மூடகொல்லி பகுதி சேர்ந்த பிரஜீஷ்(36) என்பவரை புலி அடித்துக்கொன்றதுடன் பதி உடலை தின்றுவிட்டுச் சென்ற சம்பவம் நடந்தது. வீட்டில் இருந்து புல் அறுக்கச் சென்ற பிரஜீஷ் புலி தாக்கியதில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

ராகுல் காந்தி

வனவிலங்கு தாக்குதல் சம்பவத்தை கண்டித்து வயநாடு தொகுதி எம்.பி-யான ராகுல் காந்தியும் அறிக்கை விட்டிருந்தார். ராகுல் காந்தி தனது அறிக்கையில், “வன விலங்கு தாக்குதலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளேன்” என ராகுல் காந்தி கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தில் மாநில அரசையும், வனத்துறை அமைச்சரையும் விமர்சித்து பேசியிருந்தார் கேரளத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முரளீதரன். மேலும், மக்கள் போரட்டமும் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து வயநாட்டில் வனவிலங்குகள் தாக்குதல் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தும் விதமாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

அதில் வனவிலங்குகள் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும் வகையில் சிறப்பு அதிகாரியை நியமிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. வனவிலங்குகள் தாக்குதல் நடத்தாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், வன விலங்குகள் மீது மயக்க ஊசி செலுத்துதல் உள்ளிட்ட முடிவுகளை எடுக்கும் வகையில் அந்த அதிகாரி நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பினராயி விஜயன்

மேலும், வயநாடு வன எல்லைகளில் உள்ள ரிசாட்டுகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது எனவும், ரிசாட்டுகளில் இரவு நேரத்தில் டிஜே பார்ட்டிகள் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது. வன எல்லை பகுதிகளில் இரவு ரோந்தை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளதாவது, “வனவிலங்கு தாக்குதலால் இறந்தவர்கள், காயம் அடைந்தவர்களுக்கு 11.5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் செட்டுகள், ட்ரோன் உள்ளிட்டவை வாங்குவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பென்சிங் வேலி அமைப்பதற்கான சாத்தியகூறுகள் ஆராயப்படும். வனவிலங்கு தாக்குதலை தடுக்க பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. நாம் ஒன்றாக இணைந்து வனவிலங்கு தாக்குதலை தடுப்போம்” என கூறியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.