மதுரை: கடந்த 2011ம் ஆண்டு தேர்தல் சமயத்தில், வட்டாட்சியரை தாக்கியதாக பதியப்பட்ட வழக்கில் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. தீர்ப்பில், அப்போதைய தென்மண்டல திமுக பொறுப்பாளர் மு.க அழகிரி உள்பட புகார் கூறப்பட்ட 17 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. தாக்குதலுக்கு ஆளாகி, புகார் கொடுத்த தாசில்தார் காளிமுத்து, தற்போது பிறழ்சாட்சி கூறியதால், மு.க.அழகிரி உள்பட 17 பேரும் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு […]