வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராஜ்கோட்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில், இந்திய அணி 445 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற, தொடர் 1 -1 என சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் 3வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நேற்று துவங்கியது. ‛டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித், பேட்டிங் தேர்வு செய்தார். ரோகித் சர்மா, ஜடேஜா என இருவரும் சதம் விளாச, இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்து இருந்தது. ஜடேஜா 110, குல்தீப், ஒன் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.
இரண்டாவது நாளான இன்று, ஜடேஜா 112 ரன்களுக்கும், குல்தீப் யாதவ் 4 ரன்களுக்கும் அவுட்டாகினர். ஆனால், துருவ் ஜூரல், அஸ்வின் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். துருவ் ஜூரல் 46, அஸ்வின் 37 ரன்களுக்கு அவுட்டாக, பும்ரா அதிரடியாக விளையாடி 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதன் மூலம் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 445 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.
இங்கிலாந்து அணியின் உட் 4, ஆண்டர்சன், ஹார்ட்லி, ஜோ ரூட், தலா ஒரு விக்கெட், ரேஹன் அஹமது 2 விக்கெட் வீழ்த்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement