வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்திய குடிமக்களை, வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணம் செய்வதற்கான விதிகளை கடுமையாக்குமாறு மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு, சட்ட கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பாக, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்திடம், நீதிபதி ரித்து ராஜ் தலைமையிலான சட்ட கமிஷன் அளித்த பரிந்துரையில் கூறப்பட்டு உள்ளதாவது:
இந்திய குடிமக்களை வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருமணம் செய்து மோசடி நடக்கும் நிகழ்வுகள் அதிகரிப்பது கவலையளிக்கிறது.
இந்த திருமணங்கள் ஏமாற்றும் வகையில் மாறி, குறிப்பாக பெண்களை ஆபத்தான சூழ்நிலையில் தள்ளும் முறை அதிகரித்து வருவதை பல அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. இதனால், இந்திய குடிமக்கள் – வெளிநாடு வாழ் இந்தியர்கள் இடையிலான திருமணத்தை இந்தியாவில் பதிவு செய்வதை கட்டாயம் ஆக்க வேண்டும். விவாகரத்து, துணையை பராமரிப்பது, குழந்தைகளை பராமரிப்பது,நிர்வகிப்பது, சம்மன், வாரண்ட், நீதித்துறை ஆவணங்கள் அனுப்புவது தொடர்பாக புதிய சட்டத்தில் விதிமுறைகளை வகுக்க வேண்டும்.
இது போன்ற திருமணங்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண உள்ளூர் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அந்த பரிந்துரையில் கூறப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement