Putin responsible for Alexei Navalnys death : Zobaiton | அலெக்சி நாவல்னி மரணத்திற்கு புடினே பொறுப்பு : ஜோபைடன்

வாஷிங்டன்: ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்சி நாவல்னி மரணத்திற்கு அதிபர் புடினே முழு பொறுப்பு என அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறியுள்ளார்.

ரஷ்யாவில் அதிபராக ஐக்கிய ரஷ்யா கட்சியை சேர்ந்த விளாடிமிர் புடினின் உள்ளார். இங்கு, ‘எதிர்கால ரஷ்யா’ என்ற கட்சியை நடத்தி வந்த அலெக்சி நாவல்னி,48 அதிபர் புடினுக்கு எதிராக ஊழல் புகார்களை தொடர்ச்சியாக சுமத்தி விமர்சித்து வந்தார்.

இதையடுத்து அலெக்சி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய ரஷ்ய அரசு, 2021ல் அவரை ஆர்க்டிக் சிறையில் அடைத்தது..

நேற்று சிறையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அந்நாட்டு சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும் இவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நாவல்னி மரணம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசியது,

விளாடிமிர் புடினின் ஊழல்கள், மோசமான செயல்களுக்கு எதிராக துணிச்சலுடன் செயல்பட்ட நாவல்னியின் மரணத்தில் சந்தேகம் வலுத்து வருகிறது. இதற்கு புடின் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு ஜோபைடன் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.