வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மாஸ்கோ: அதிக குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள் என ரஷ்ய மக்களுக்கு அந்நாட்டு அதிபர் புடின் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் தொகை, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், உலகின் பெரும்பாலான நாடுகளில் மக்கள் தொகை சரிவு மிகப்பெரிய பிரச்னையாகி உள்ளது. அந்த வகையில் ரஷ்யாவும், இப்போது மக்கள் தொகை சரிவால் பிரச்னையை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது. உக்ரைன் நாட்டுடனான போரால் ரஷ்யாவிலும் பலர் கொல்லப்பட்டனர். இதனால் மக்கள் தொகையை அதிகரிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது: ரஷ்ய நாட்டு தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குழந்தை இருந்தால் மட்டும் போதாது. ஏனெனில் ரஷ்யாவின் மக்கள் தொகை குறைந்துவிடும். ஒரு நாடு வாழ, ஒரு குடும்பத்திற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று குழந்தைகளாவது இருக்க வேண்டும். ஒரு தம்பதி குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement